புத்தகம்

கதைச் சுருக்கம்:

சேர நாட்டின் கடற்பகுதியில் புரவிகளை ஏற்றி வரும் மரக்கலங்கள் கொள்ளை போகின்றன. நடப்பதை அறிய வருகிறான் பாண்டியர் படைத்தலைவன் பெருவழுதி. நம்பவும் முடியாத சதிச்செயல்கள் நடக்க, புதிரை அவிழ்க்க முயற்சிக்கிறான். முடிகிறதா அவனால்? என்ன நடக்கிறது? படியுங்கள் நாவலை.

கதைச் சுருக்கம்:

ஆறாம் நூற்றாண்டின் தொடக்க காலம். மத நம்பிக்கைகள் மக்களைப் பிரித்திருந்த காலம். பௌத்தமும் சமணமும் ஒருபுறம் செல்வாக்கு பெற்றிருக்க, மற்றொரு புறம் வைதீக சமயங்கள் அவை இரண்டையும் வீழ்த்த சமயம் பார்த்திருந்தன. பல்லவ மன்னரோ வைதீக சமயக் காவலர். அவருடைய மூன்றாவது மகனோ ஒரு பௌத்தத் துறவி. இந்தப் போராட்டத்தில் வேளாண் பெருமக்கள் ஒரு புறமும் மற்றொரு புறம் வணிகர்களும் இருந்தனர். பல்லவ நாட்டைச் சுற்றிலும் களப்பிரர்கள். கடல் மல்லையில் வேற்று நாட்டவர்களின் சூழ்ச்சிகள். இவ்வளவு பேருக்கும் இலக்காக போதிதர்மா. விவரிக்க இயலாத சம்பவங்கள், குறுக்கீடுகள், திருப்பங்கள், அதிர வைக்கும் சரித்திர உண்மைகள், படித்துப் பாருங்கள். உங்களைப் புரட்டிப் போட்டு விடும்படியான நாவல்.

கதைச் சுருக்கம்:

சோழ இளவரசன் ஆதித்த கரிகாலன் பாண்டிய நாட்டிற்கு எதிராகப் படை திரட்டுகிறான். படையில் சேர சாவக இளைஞன் பவவர்மன் வருகிறான். யாரும் எதிர்பாராத வகையில் சூழ்ச்சி வலையில் சிக்குகிறான். அதிலிருந்து தப்புகிறானா? அல்லது வீழ்கிறானா? விடை விறு விறுப்பான நாவலில்.

கதைச் சுருக்கம்:

உறையூர் பௌத்த மடத்திலிருந்து குருநாதரின் கட்டளையை ஏற்று புறப்படுகிறான் ஆதித்தன். சாளுக்கிய மன்னனைச் சந்திக்க பல்லவ நாட்டில் வழி தேடுகிறான். இடையில் ஏந்திழையர் இருவர். இரு பெரும் சக்கரவர்த்திகள். வஞ்சக நரியென கோவிந்தன். எத்தனையோ குறுக்கீடுகள், இன்னல்கள். வழி கிடைத்ததா? பணி முடிந்ததா? சளைத்தானா அல்லது சாதித்தானா? வாசியுங்கள் நாவலை.

கதைச் சுருக்கம்:

கடல் வழியாக வந்த கொள்ளையர்கள், சேரர் துறைமுக நகரான தொண்டிக்குள் நுழைந்து அதைக் கைப்பற்றிக் கொள்கிறார்கள். புலவர் குமட்டூர்க் கண்ணனார் அவர்களிடம் சிறைப்படுகிறார். எதிர்பாராத விதமாக கொள்ளையரிடமிருந்து தப்பிக்கும் இளவரசி இமயவல்லி பாண்டியர் உபசேனாதிபதியிடம் நகரை விடுவிக்கும் பொறுப்பை ஒப்படைக்கிறாள். முடிந்ததா அவனால்? என்ன நடக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும் பரபரப்பில்.